Thursday, December 9, 2010

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

என்ன செய்து கிழித்து
விட்டார் பெரியார்?”
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்.

“பெரியாரின்
முரட்டுத்தனமான
அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு
வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

“என்னங்கபெரியார்
சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல
என்ன செஞ்சி கிழிச்சது?”
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக்
கொண்டிருக்க
இங்கே டெலிபோன்
டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா சுந்தர ராமசாமிக்கு
இணையாக
சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

படித்ததில் பிடித்தது -2

நாம் மட்டும் புரிந்து கொள்ள
நம் நட்பு புனிதமடி
தவறுகள் இருப்பினும்
தனியான பெருமையுண்டு.

உணர்ச்சியின் எல்லைக்கும்
உணர்வுகளின் எல்லைக்கும்
எமை அணைத்து வைக்க
எம்மாலே முடியுமடி!

புரிதல்கள் மட்டுமல்ல
பிரிதல்கள் கூடவே
இயல்பாக புரியுமிங்கே
இலக்கணம் தேவையில்லை.

கனமான எம் பாசம்
ரணமாகிப் போகாமல்
இயல்பாக வெளிப்படுத்த
எம்மாலே முடியுமிங்கே.

நட்பு என்ற உறவு
நம்மளவில் இருந்தாலும்
ஒரு படி உயர்த்தியாக
உயிரையும் கொடுப்போம்.

எம் நட்பின் புனிதம்
இருந்தாலும் வாழும்
இறந்தாலும் வாழும்
உயிர் உள்ளவரை தொடரும்

படித்ததில் பிடித்தது - 1

இன்னொரு ஜென்மம்
எடுக்க போவதில்லை
நீயும் நானும்
நண்பர்களாக........
இருக்கும் நாட்கள்
மட்டுமே நமக்கு
சொந்தம் ......
இதில்,
விருப்பங்களும்
வெறுப்புகளும் எதற்காக..?
தொலைவுகள் இருந்தாலும்
தொடரட்டுமே
நம்
நட்பு
......சுரேஷ்.
இளங்கலை பொறியியல் முதலாம் ஆண்டு